search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள் வெட்டி கடத்தல்"

    • திண்டுக்கல் கிழக்கு தாலுகா, பெரியகோட்டை ஊராட்சி, பில்லமநாயக்க ன்பட்டி ஊரின் வழியே செல்லும் சந்தனவர்தினி ஆற்றின் அருகே அமை ந்துள்ளது நமச்சிவாயம் குளம்.
    • மரங்களை தன்னலத் தேவைக்காகவும், அரசின் அனுமதியின்றி சட்டத்திற்கு எதிராகவும், வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

    ண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே தீத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். சமூக ஆர்வலர். இவர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிரு ப்பதாவது, திண்டுக்கல் கிழக்கு தாலுகா, பெரியகோட்டை ஊராட்சி, பில்லமநாயக்க ன்பட்டி ஊரின் வழியே செல்லும் சந்தனவர்தினி ஆற்றின் அருகே அமை ந்துள்ளது நமச்சிவாயம் குளம்.

    இதன் மூலம் சுற்றுவட்டார 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இதில் மரங்கள் அதிகம் உள்ளது. மரங்களை தன்னலத் தேவைக்காகவும், அரசின் அனுமதியின்றி சட்டத்திற்கு எதிராகவும், வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

    அந்த மர்ம நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளவும், மேலும், இனிவரும் காலங்களில், இதுபோன்ற சட்டவிரோத செயல்பாடுகள் நடை பெறாமல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடுக்கவும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • இலக்கியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 20 டன்னுக்கு மேற்பட்ட விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன.
    • பள்ளி வளாக பராமரிப்பு பணிகள் எனக்கூறி தனிச்சையாக சிலர் எவ்வித அனுமதியின்றி வெட்டி கடத்தி சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர் நிலை பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் உள்ளே வேம்பு, புங்கை, பாதம், மூங்கில், வாகை, தேக்கு உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மரங்கள் நன்கு வளர்ந்து உள்ளது.

    இப்பள்ளியின் சுற்று சுவர் அருகாமையில் உயர் மின் அழுத்த மின்சார வயர் செல்வதால் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை அங்கிருந்து அகற்றி பள்ளிக்கு வெளியே அமைக்குமாறு கடந்த 2022-ம் ஆண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த கவிதா என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கான நடவடிக்கை இன்று வரை எடுக்கவில்லை.

    இந்நிலையில் தற்போது உள்ள பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் என்பவர் பள்ளி வளாக பராமரிப்பு பணிகள் எனக்கூறி தீர்மானத்தை நிறைவேற்றி தன்னிச்சையாக கடந்த சில தினங்களாக மாவட்ட நிர்வாகத்தின் எவ்வித அனுமதியும் பெறாமல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுவிட்டேன் என தெரிவித்து விட்டு மினி லாரியில் 20 டன்னுக்கும் மேற்பட்ட சுமார் 5 லோடு நன்கு வளர்ந்த வேம்பு, புங்கை, பாதாம் உள்ளிட்ட மரங்களும், பள்ளியின் சுற்று சுவர் ஓரத்தில் நன்கு வளர்ந்து விலை உயர்ந்த தேக்கு மரத்தையும் பள்ளி செயல்பட்டு கொண்டு இருக்கும் போதும் இரவு பகலாக வெட்டி கடத்தி சென்றுள்ளார்.

    இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களும், ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியுற்றனர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலவலரிடமும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் இச்சம்பவம் குறித்து கேட்ட போது, அம்மாதிரியான சம்பவம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும், தங்களிடம் யாரும் அனுமதியும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பராமரிக்கபட்டு வந்த மரங்களை வெட்டி கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. ஆனால் கல்வி துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மரங்களை கடத்துபவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருவாய்த்துறைக்கு சொந்தமான மரங்களை மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடியோடு வெட்டி கடத்தியுள்ளனர்.
    • அதிகாரிகளின் துணையோடு நடந்ததா என்று விசாரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கம்பம்:

    கம்பம் அருகேயுள்ளது நாராயணத் தேவன்பட்டி ஊராட்சி, இந்த ஊராட்சியிலிருந்து சுருளிஅருவிக்கு செல்லும் பழைய சாலை சுமார் 2 கி.மீ தூரம் சாலை அமைக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 91 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் சாலை அமைக்கப்படும் இடத்தில் பழமை வாய்ந்த வேம்பு, மா உள்ளிட்ட பல வகை மரங்கள் இருந்தன.

    இந்நிலையில் அந்த மரங்களை மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடியோடு வெட்டி கடத்தியுள்ளனர். இதனை பார்த்த ஊராட்சி நிர்வாகத்தினர், நாராயணத்தேவன் பட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.அனுமதியின்றி மரங்களை வெட்டியதால் கிராம நிர்வாக அலுவலர் முருகன் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து வருவாய் ஆய்வாளர் நாகராஜிடம் மரம் வெட்டியது குறித்து வி.ஏ.ஓ மூலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். 

    இது குறித்து நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த சுற்று சூழல் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, பல லட்சம் மதிப்புள்ள அரிய வகை மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது இது வரை வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது அதிகாரிகளின் துணையோடு நடந்ததா என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மரம் வளர்ப்போம், மழை வளம் காப்போம் என்ற அரசின் கொள்கைக்கு எதிராக செயல்படுபவர்கள்மீது ஆர்.டி.ஓ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×